|Monday, January 16, 2017

தமிழ்@TMT

தி.மு.க. செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு

சென்னை, ஜனவரி 4: தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதி வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அவர் முழுமையாக கட்சிப் பணிகளை ஆற்ற முடியாத நிலையில் இருப்பதால் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை செயல் தலைவராக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக தி.மு.க. பொதுக்குழு சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கத்தில் இன்று கூடியது. கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை. ...Full Article

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள்

கோலாலம்பூர், ஜனவரி 4: கிளந்தானிலும் திரங்கானுவிலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மலேசிய தன்னார்வத் துறை ரேலா உதவிக் குழுவை தொடங்கியுள்ளது. தொடக்க கட்டமாக அக்குழுக்கள் கிளந்தானுக்கும் திரெங்கானுவுக்கும் அனுப்பப்படவிருப்பதாக துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹமட் சாயிட் ஹமிடி தெரிவித்தார். ...Full Article

இந்தியாவின் 5 மாநிலங்களில் ஒரு சேர தேர்தல்

புதுடில்லி, ஜனவரி 4: இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் பிப்ரவரி மார்ச் மாதங்களில் தேர்தல் நடைபெறவிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் 7 கட்டமாகவும் மணிப்பூரில் 2 கட்டமாகவும், கோவா, பஞ்சாப், உத்தர்கண்டில் ஒரே கட்டமாகவும் சட்ட சபை தேர்தல் ...Full Article

சிறப்பு விலையில் கே.டி.எம் பயணச் சீட்டு

கோலாலம்பூர், ஜனவர் 4: பயணிகளிடையே குறைவான ரொக்கப் பண பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக கே.டி.எம். நிறுவனம் அதன் கொமுட்டர் லிங் பயண அட்டைக்கு சிறப்பு விலைக் கழிவை அறிவித்துள்ளது. நாளைத் தொடங்கி பிப்ரவரி ஐந்தாம் தேதி வரை கொமுட்டர் லிங் பயண ...Full Article

வான வேடிக்கை விபத்து – போலீஸ்-சில் சரணடைய நாளை வரை அவகாசம்

ஷா அலாம், ஜனவரி 4: கிள்ளான், பண்டாமாரான் விளையாட்டு அரங்கத்தின் திடலில் 2017 ஆம் புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சியின் போது நிகழ்ந்த வான வேடிக்கை விபத்து தொடர்பான விசாரணைக்கு உதவ போலீஸ்-சிடம் சரணடைய அதனை வெடித்தவருக்கும் அவரின் மூன்று உதவியாளர்களுக்கும் ...Full Article

மாணவர்களின் பாதுகாப்புக்கு கூடுதல் கவனம் தேவை

கோலாலம்பூர், ஜனவரி 4: பள்ளி நுழைவாயில்களுக்கு அருகில் மாணவர்கள் கடந்து செல்ல சிறப்பு வழிப் பாதைகளை அமைத்துத் தரும்படி அமலாக்கத் தரப்பிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த இது உதவும் என வேலையிட சுகாதார பாதுகாப்பு கழகத் தலைவர் ...Full Article

வெள்ள நிலைமை மோசமடைகிறது – 60 க்கும் அதிகமான பள்ளிகள் மூடப்பட்டன

பெசூட், ஜனவரி 4: திரங்கானுவில் வெள்ளம் கடுமையாகியுள்ள நிலையில் உலு திரெங்கானு, பெசூட், செத்தியூ, கெமாமான் ஆகிய நான்கு மாவட்டங்களில் 63 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 16 ஆயிரத்து 938 மாணவர்களும் ஆயிரத்து 949 ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில கல்வி ...Full Article

தங்க ரதமா? வெள்ளி ரதமா? சர்ச்சைக்கு தீர்வு பிறக்குமா?

கோலாலம்பூர், ஜனவரி 3: இவ்வாண்டுக்கான தைப்பூச திருவிழா பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பதற்கே திருவிழா களை கட்டத் தொடங்குவதற்கு முன்னதாகவே சர்ச்சைக்கள் ஓங்க ஆரம்பித்து விட்டன. பினாங்கு ...Full Article

கூடுதல் தமிழ் பாலர் பள்ளி தேவை – பள்ளி நிர்வாகங்கள் கோரிக்கை

கோலாலம்பூர், ஜனவரி 3: கடந்தாண்டைக் காட்டிலும் இவ்வாண்டில் தமிழ்ப்பள்ளிகளில் புதிய மாணவர்களின் பதிவு அதிகரித்திருப்பதாக கண்டறியப்பட்டது. தமிழ்ப்பள்ளிகள் பல பெற்றோர்களின் தேர்வாக அமைந்துள்ளதைக் காண முடிந்தது. கிளந்தான், திரெங்கானு, ஜொகூர் மற்றும் கெடா மாநிலங்களில் புதிய பள்ளி தவணை ஞாயிற்றுக்கிழமை ...Full Article

விளையாட்டு வினையானது

ஈப்போ, ஜனவரி 3: கங்சார் சாலையின் மலைப்பகுதியில் அமைந்திருக்கும் ஈப்போ எனும் ராட்சத எழுத்துக்களின் மீது ஏறிய இளையோர் 8 பேர், போலீஸ் உத்தரவாதத்தின் பேரின் விடுவிக்கப்பட்டுள்ளனர். 20 வயதிலிருந்து 24 வயதுக்கு உட்பட்ட ஆடவர் ஐவரும் பெண்கள் மூவரும் ...Full Article
Page 5 of 152« First...34567...102030...Last »