|Friday, March 31, 2017

தமிழ்@TMT

சிலாங்கூரில் எல்லாத் தொதிகளிலும் பாஸ் கட்சி போட்டி!

கோத்தபாரு, மார்ச் 24: வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள அனைத்து தொகுதிகளிலும் பாஸ் கட்சி தனது வேட்பாளர்களை நிறுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 விழுக்காடு மலாய்க்கார வாக்காளர்களைக் கொண்டிருக்கும் எல்லாத் தொகுதிகளிலும் பாஸ் கட்சி தனது வேட்பாளர்களை நிறுத்தும் என்று அக்கட்சியின் ஆய்வு மைய நடவடிக்கை இயக்குநர் டாக்டர் ஸ¥டி மர்சுக்கி தெரிவித்தார். வரும் பொதுத் தேர்தலில் பாஸ், நம்பிக்கை கூட்டணி, தேசிய முன்னணி என மும்முனைப் போட்டி ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு எல்லாத் தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு இக்கட்சி மேற்கொண்ட ...Full Article

பட்டதாரிகள் குறைவான சம்பளத்தையே பெற்று வருகின்றனர் – ஆய்வு

கோலாலம்பூர், மார்ச் 24: கடந்த 2007ஆம் ஆண்டு வேலை செய்ய தொடங்கிய பட்டதாரிகள் இன்று வரை 2 ஆயிரம் வெள்ளிக்கும் குறைவான சம்பளத்தையே பெற்று வருகின்றனர். இது 2015ஆம் ஆண்டு வரை எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. நேற்று வெளியிடப்பட்ட பேங்க் ...Full Article

அடுத்த வாரம் சிறார் பாலியல் சட்ட மசோதா தாக்கல்!

கோலாலம்பூர், மார்ச் 24: நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் குற்றச்செயல் சம்பவங்களுக்கு விவேகமாக, முழுமையாகத் தீர்வுகாணும் வகையில் அடுத்த வாரம் 2017ஆம் ஆண்டு சிறார் பாலியல் குற்றச்செயல் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ...Full Article

கட்டாய மரணத் தண்டனையை ரத்து செய்ய அரசாங்கம் ஆய்வு

கோலாலம்பூர், மார்ச் 24: கட்டாய மரணத் தண்டனையை ரத்து செய்யும் வகையில் குற்றவியல் சட்டத்தின் 39பி சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஒஸ்மான் கூறினார். தூக்குத் தண்டனை கொள்கை, அது தொடர்பான ஆய்வுக்கு ...Full Article

பணவீக்கம் 4% ஆக உயரும்!

கோலாலம்பூர், மார்ச் 24: இவ்வாண்டு நாட்டின் பணவீக்கம் 3 முதல் 4 விழுக்காடு வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டில் எரிபொருளுக்கான சில்லறை விலை உயரும் வகையில் அனைத்துலக அளவில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் பணவீக்கம் உயரலாம் என நம்பப்படுகிறது. ...Full Article

‘பச்சை விளக்கு’ கிடைத்தால் மட்டுமே சேவை செய்வது அரசியலுக்கு அழகல்ல’ – ஹரிட்ஸ் மோகன்

கோலாலம்பூர், மார்ச் 23: பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் அப்துல் ரசாக் பச்சை விளக்கைக் காட்டினால் மட்டுமே சேவை செய்ய வேண்டும் என்பது தேசிய முன்னணியின் அரசியல் பயணத்திற்கு அழகல்ல என மைபிபிபி கட்சியின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் ...Full Article

ஜெயலலிதா மரணம்: சசிகலாவை விமர்சித்து குவியும் கடிதங்கள்

பெங்களூர், மார்ச் 23:  முறைகேடாக சொத்து குவித்த வழக்கில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை அனுபவிப்பதற்காக அவர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் அடைக்கப்பட்டுள்ள செல்லில் அவரது ...Full Article

மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை

கோலாலம்பூர், மார்ச் 23: லண்டன் வெஸ்ட்மின்ஸ்டரில் நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்பதை வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத தாக்குதல்காரன் வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தைக் கடந்து காரை வேகமாக செலுத்தி வழி நெடுகிலும் ...Full Article

வாடகை வீடு: வீட்டுப் பிரச்னைக்கான முறையான தீர்வுகளில் ஒன்று

கோலாலம்பூர், மார்ச் 22: இப்போதைக்கு எல்லோரும் வாங்கக்கூடிய விலையில் உள்ள வீடுகள் என்று அரசாங்கம் அங்கீகரித்திருக்கும் வீடுகளின் விலைகளே மவெ. 100,000லிருந்து மவெ. 400,000 வரைக்கும் இருக்கின்றன. இந்த விலையில் உள்ள வீடுகளை தொழிலாளர் வர்க்கமும், கல்வியை முடித்து புதிதாக ...Full Article

டாயிஸ் தீவிரவாதிகள் என நம்பப்படும் 234 பேர் கைது!

கோலாலம்பூர், மார்ச் 22: டாயிஸ் தீவிரவாதிகள் என நம்பப்படும் 234 மலேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு நேற்று தெரிவித்தது. மேலும் 95 மலேசியர்கள் சிரியாவிலுள்ள டாயிஸ் தீவிரவாதக் கும்பலுடன் தொடர்பு கொண்டுள்ளதையும் உள்துறை அமைச்சு அடையாளம் கண்டுள்ளதாகவும் அது ...Full Article
Page 4 of 194« First...23456...102030...Last »