Ramanan hammers ‘professional thief’ Subra over MIC’s despicable fate
August 18, 2016
Najib’s bucket list: Playing football, writing books and holidays
August 18, 2016

பழைய பல்லவியை பாட வேண்டாம், டாக்டருக்கு ரமணன் கண்டனம்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 18: ம.இ.கா. கிளைத் தலைவர்களுக்கு இறுதி வாய்ப்பு என்று டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். சுப்பிரமணியம் விருத்திருக்கும் அழைப்பு என்பது பழைய பல்லவி ஆகும் என்று கட்சியின் முன்னாள் தலைமைப் பொருளாளர் டத்தோ ஆர்.ரமணன் தெரிவித்துள்ளார்.

கடந்த 40 ஆண்டு காலத்திற்கும் கட்சிப் பணியாற்றியவர்கள் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பின் ஆதரவாளர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. அவர்கள் 45 விழுக்காட்டினர் இன்னமும் விசுவாசிகளாகத்தான் இருக்கிறார்கள். இதனை டாக்டர் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதை அவருக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

கட்சியை தனிச்சையாக நடத்திக் கொண்டு, ம.இ.கா. தன் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் பொய்யான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வரும் டாக்டர் சுப்பிரமணியம் ம.இ.கா. கிளைகளுக்கு கெடு விதிப்பது அவர் நடத்துகின்ற நாடகமாகும்.

கடந்த 40-60 ஆண்டு காலத்திற்கும் மேலாக கட்சிக்கும் சமுதாயத்திற்கும் சேவையாற்றி வந்துள்ள உறுப்பினர்கள் இன்னமும் டத்தோஸ்ரீ பழனியின் பின்னால் ஆதரவாக இருந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் விசுவாசிகளாக இருந்து வருகின்றனர்.

அடுத்து வரும் பொதுத் தேர்தலில் இவர்கள் அனைவரும் வாக்கு வங்கிகளாக இருந்து வருகின்றனர். தேசிய முன்னணிக்கு இவர்களால் வாக்குகள் கொண்டு வரமுடியும். ஆனால் டாக்டரால் தேசிய முன்னணிக்கு வாக்குகளை சேகரித்துக் கொண்டு வர முடியுமா என்று சவால் விடுக்கின்றேன்.

கிளைகளை மறுபதிவு செய்ய வேண்டும் – வேட்புமனுக்கள் செய்ய வேண்டும் என்று டத்தோஸ்ரீ பழனி தரப்பினரை குழப்பமடையச் செய்வதில் டாக்டரும் அவரின் அதிகாரிகளும் தற்போது மும்முரம் காட்டி வருகின்றனர். இதன்மூலம் கட்சி தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்று ஒரு பொய்யான தோற்றத்தைக் காட்டி கட்சிக்குள் அனைவரையும் கொண்டு வந்துவிட்டதாக டத்தோஸ்ரீ நஜிப்பை நம்ப வைக்கும் ஒரு நாடகமாகும்.

ம.இ.கா.வை உயர்ந்து இடத்திற்கு கொண்டுச் செல்லப் போகிறேன் என்று கூறி அமைச்சர் பதவியை இழந்துதான் மிச்சம்.

எனவே டத்தோஸ்ரீ பழனிவேல் தரப்பை பொறுத்தவரை மறுதேர்தல் வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். இதில் எந்த சமரசமும் கிடையாது.

ம.இ.கா.வில் இன்று நடக்கும் அத்தனை குழப்பங்களுக்கும் டாக்டர்தான் காரணம் என்பதை மறுக்க முடியாது. அதிகார வெறியுடன் செயல்படலாம் என்று நினைத்தால் அது கட்சியைத்தான் பலவீனப்படுத்தும் என்று டத்தோ ரமணன் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.