பாலாவின் மானநட்ட வழக்கில் எதிர்வாதம் செய்ய நஜிப் – ரோஸ்மாவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
October 12, 2017
Another body of missing crew from tanker and boat collision found near Raffles Lighthouse
October 12, 2017

14,688 பேரின் கடன் பிரச்சினைக்கு தீர்வுக்காண ஏ.கே.பி.கே. உதவி!

கோலாலம்பூர், அக். 12: இவ்வாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை 14,688 பேர் எதிர்நோக்கியிருந்த 56 கோடியே 30 லட்சம் வெள்ளி  கடன் பிரச்சினைக்கு ஏ.கே.பி.கே. எனப்படும் நிதி நிர்வாக மற்றும் ஆலோசக நிறுவனம் கடன் நிர்வாகத் திட்டத்தின் கீழ் உதவி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடு, வாகன வாங்குவதற்கு வாங்கப்பட்டிருந்த கடன்கள் உட்பட தனிப்பட்ட கடன், கடன் பற்று அட்டை மீதான கடன்களை அடைப்பதற்கு பெரும் சிரமத்தை எதிர்நோக்கியிருந்த மக்களுக்கு உதவும் வகையிலேயே கடன் நிர்வாகத் திட்டம் மீதான
நிதி நிர்வாக மற்றும் ஆலோசக நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.

கடந்த 2006ஆம் ஆண்டு அது தொடங்கப்பட்டது முதல் இவ்வாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை 6 லட்சத்து 31 ஆயிரத்து 386 பேர் இந்த கடன் நிர்வாகம் தொடர்பாக ஆலோசனைகளைப் பெற்றுள்ளதாக அதன் தலைமை செயல்முறை அதிகாரி அஸாடின் நிஙா தாசிர் கூறினார்.

இவர்களில் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 915 பேர் இத்திட்டத்தில் தங்களைப் பதிவு செய்துக் கொண்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
நேற்று ஏ.கே.பி.கே. விருது வழங்கும் விழாவில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு சொன்னார். பேங்க் நெகாராவின் உதவி கவர்னர் அபு ஹசான் அல்சாரி யாஹ்யா விருதுகளை எடுத்து வழங்கினார்.

கடன் நிர்வாகத் திட்டத்தில் தங்களைப் பதிவு செய்து கொண்டவர்களில் 68.7 விழுக்காட்டினர் 30 வயதுக்கும் 50
வயதுக்கும் உட்பட்டவர்கள். அவர்கள் அனைவரும் தங்களின் கடன் பற்று அட்டைகளை திரும்பச் செலுத்த முடியாத நிலையில்
இருந்ததாகவும் அவர் சொன்னார்.

ஏ.கே.பி.கே. நிறுவனத்திடம் உதவிக்கு வந்தவர்களில் 44.7 விழுக்காட்டினர் தங்களின் கடன்களை திரும்பச் செலுத்த
முடியாத நிலையில் இருந்தவர்கள். 19.3 விழுக்காட்டினர் வாழ்க்கைச் செலவினத்தால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள், 14.8
விழுக்காட்டினர் வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டவர்கள், 9.3 விழுக்காட்டினர் கூடுதல் மருத்துவச் செலவுகளை எதிர்நோக்கியவர்கள், 11.9 விழுக்காட்டினர் இதர விவகாரங்களில் சிக்குண்டவர்கள் என்றார்.

கடன் நிர்வாகத் திட்டத்தில் பங்கு கொண்டவர்களில் 14.6 விழுக்காட்டினர் எந்தவித கடன்களையும் எதிர்நோக்காதவர்கள். ஆனால், அவர்கள் நிதி நிர்வாகம் தொடர்பாக எங்களிடம் ஆலோசனையைப் பெற வந்தவர்கள் என்றும் அவர்
சொன்னார்.

இதிலிருந்து இளைஞர்கள் தங்களின் நிதி நிர்வாகத்தை திறமையுடன் மேற்கொள்ள நிதி நிர்வாக மற்றும் ஆலோசக
நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளனர் என்பது நிரூபனமாகியுள்ளது என்றார். –தி மலேசியன் டைம்ஸ்

Comments are closed.