Nahas Duke: Anak mangsa gembira tinggal bersama emak, bapa saudara – Saksi
January 11, 2017
“I have lost not only a comrade but also a good friend”
January 11, 2017

விபத்துக்களை குறைக்க சிறப்பு அணுகுமுறைகள்

கோலாலம்பூர், ஜனவரி 11: நாட்டில் அண்மைய காலமாக அதிகரித்துள்ள விரைவு பேருந்துகளை உட்படுத்திய விபத்துக்களையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புக்களையும் தவிர்க்க அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

சட்ட அமலாக்கம், விதிமுறைகளை கடுமையாக்குவது என பல அணுகுமுறைகள் கையாளப்பட்டு வரும் போதிலும், குறிப்பாக விழாக்காலங்களில் நிகழும் விபத்துக்களையும் அது ஏற்படுத்தும் உயிரிழப்புக்களையும் தவிர்க்க முடிவதில்லை.

இதனைக் கருத்திற் கொண்டே, விரைவு பேருந்து சேவை மீதான கண்காணிப்பை அமலாக்கத் தரப்பு வலுப்படுத்தியுள்ளது. விரைவு பேருந்துகளில் பயணிகளைப் போல் மாற்று உடையில் அமலாக்க அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வது முதல் ஓட்டுனர் குறித்து பயணிகள் புகார் செய்ய சிறப்பு முறையை அறிமுகப்படுத்தியது வரையில் துரித நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

அவ்வகையில் ஆகக் கடைசியாக, அதிகமான இளைஞர்கள் விரைவுப் பேருந்து ஓட்டுநர்களாக பணியாற்ற ஊக்குவிக்கப்படுகின்றனர். நாட்டில் விரைவுப் பேருந்துகளை ஓட்டுபவர்களில் பெரும்பாலானோர் சராசரியாக நாற்பது வயதுக்கும் மேற்பட்டவர்களே.

விரைவுப் பேருந்தை ஓட்டுவதற்கு குறிப்பிட்ட வயது வரம்பை அரசாங்கம் இதுவரை நிர்ணயிக்கவில்லை. ஆனால், தற்போது விரைவுப் பேருந்து சேவைகளில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானோர் நாற்பது வயதுக்கும் மேற்பட்டவர்களாக இருப்பதால், முதுமையின் காரணத்தால் பலரால் நெடுந்தூர பயணங்களை மேற்கொள்ள முடிவதில்லை என பிரதமர் துறையின் அமைச்சர் டத்தோ ஸ்ரீ நான்சி சுக்ரி குறிப்பிட்டிருக்கிறார்.

அதனால், விரைவுப் பேருந்து நிறுவனங்கள், தூர பயணத்திற்கு ஏற்ற ஓட்டுநர்கள் இல்லாத பிரச்சனையை எதிர்நோக்கி வருகின்றன. இளைஞர்கள் இத்துறையில் ஆர்வம் காட்டுவதன் மூலம் இப்பிரச்சனையை சமாளிக்க முடியும் என நான்சி குறிப்பிட்டார். அதோடு, பேருந்து ஓட்டும் உரிமம் பெறுவதற்கான கட்டணத்தையும் குறைப்பதற்கு அரசாங்கம் ஆலோசிக்கும் எனவும் அவர் நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறார்.

இத்தகைய அணுகுமுறைகளின் வாயிலாக நாட்டில் அதிகரித்து வரும் விரைவு பேருந்துகளை உட்படுத்திய சாலை விபத்துக்களையும் அதனால் ஏற்படும் பேரளவிலான உயிரிழப்புக்களையும் தவிர்க்கவும் குறைக்கவும் முடியும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.–தி மலேசியன் டைம்ஸ்

Comments are closed.