M’sian forensics test samples in Kim Jong Nam killing
February 17, 2017
ஐந்து மில்லியனுக்கும் அதிகமானோருக்கு நாளை பிரிம் தொகை
February 17, 2017

வட கொரிய அதிபரின் தம்பி படுகொலை நாடு முழுவதும் கூடுதல் பாதுகாப்பு!

கோலாலம்பூர், பிப்ரவரி 17: கடந்த திங்கட்கிழமை கே.எல்.ஐ.ஏ.2இல் வடகொரியா அதிபரின் தம்பி கிம் ஜோங் னாம் கொலைச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதுமுள்ள நுழைவாயில்களில் கூடுதல் பாதுகாப்பு விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், கே.எல்.ஐ.ஏ.2 ஆகியவையும் அடங்கும் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அப்துல் சமா மாட் கூறினார்.

இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் யாரும் இந்நாட்டிலிருந்து எளிதாக வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள தரப்பினரை அடையாளம் கண்டு அவர்களை வேட்டையாடும் ஒரு பொருட்டாகவும் இது அமைந்திருக்கும் என்றார்.

மேலும் விசாரணைக்கு உதவும் வகையில் பல்வேறு தகவல்களைப் பெறுவதற்காக மலேசியாவிலுள்ள வட கொரிய தூதரக அலுவலகத்திலிருந்து காத்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.

படுகொலையில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் இன்னும் இந்நாட்டிலே உள்ளார்களா என்று அவரிடம் கேட்டபோது,
அதுகுறித்து பதிலளிக்க மறுத்த அவர், அதுகுறித்து விசாரணை செய்து வருகிறோம் என்றார்.

இதனிடையே, நேற்று காலை கைது செய்யப்பட்ட சித்தி ஆய்ஷ என்ற பெண் இந்தோனேசியா கடப்பிதழ் பெற்றிருப்பவர் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் கூறினார்.

அவர் கடந்த 11.2.1992ஆம் தேதி இந்தோனேசியாவின் செராங்கில் பிறந்தவர் என்றார். முன்னதாக நேற்று முன்தினம் காலை 8.20 மணியளவில் வியட்னாமிய 29 வயது நிரம்பிய பெண் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.–தி மலேசியன் டைம்ஸ்

Comments are closed.