உடல் உறுப்புக்களை தானம் செய்வீர் – மலேசியர்களுக்கு வலியுறுத்து
March 20, 2017
H5N1: 1,800 unggas, 1,075 telur dilupuskan semalam
March 20, 2017

ரிங்கிட் வீழ்ச்சியின் தாக்கம் அனைவருக்கும் பொதுவானது – பிரதமர்

கோலாலம்பூர், மார்ச் 20: ரிங்கிட்டின் மதிப்பு குறைந்த போதிலும் அந்நிய நாணய பரிவர்த்தனை சந்தைக்கு அது தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் என பிரதமர் உறுதியளித்துள்ளார். நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் சீராக நடைபெறுவதற்கு ஏதுவான முயற்சிகளை மேற்கொள்ளும் கடப்பாட்டை அரசாங்கம் கொண்டிருப்பதாக நிதி அமைச்சருமான டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.

பேங்க் நெகாராவின் கையிருப்பு தற்போது 95 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இது, நிதி சந்தையில் ஏற்ற இறக்கத்தை சமாளிக்க போதுமானதாக இருக்கிறது என பிரதமர் தெளிவுபடுத்தினார்.

ரிங்கிட் மதிப்பு சரிவின் தாக்கத்தை இவ்வட்டார நாடுகளும் எதிர்நோக்க வேண்டியிருக்கும் என நஜிப் கூறினார். மாறாக, மலேசியர்கள் மட்டுமே அதன் தாக்கத்தை எதிர்நோக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டார்.

2016 ஆம் ஆண்டில் ரிங்கிட்டின் மதிப்பு ஓர் அமெரிக்க டாலருக்கு 4.3 விழுக்காடு வீழ்ச்சி கண்டது. வெளி காரணங்களினாலும் நிதி பரிவர்த்தனையில் ஏற்பட்ட மாற்றத்தினாலும் அச்சரிவு ஏற்பட்டதாக நஜிப் விளக்கினார்.

அதே வேளையில், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலையற்று இருந்தது அரசியல் நிலைத்தன்மை அற்ற சூழல் உள்ளிட்ட கணிக்கக் கூடிய காரணங்களினாலும் ரிங்கிட் மதிப்பு குறைந்ததாக நஜிப் கூறினார்.–தி மலேசியன் டைம்ஸ்

Comments are closed.