5,153,238 BR1M applications approved in 2017 – Najib
February 17, 2017
Jong-nam’s body will not be released until family DNA sample given
February 17, 2017

ரிங்கிட்டின் மதிப்பு வீழ்ச்சியால்…

கோலாலம்பூர், பிப்ரவரி 17: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளதால் மலேசியர்கள் பலர் சிங்கப்பூருக்குபடையெடுக்கத் தொடங்கியுள்ளனர். சிங்கைக்கு வேலைக்குச் செல்லும் மலேசியர்களின் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் பல மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு 24 விழுக்காடு மலேசியர்கள் இங்குள்ள வேலையை விட்டு அண்டை நாடான சிங்கப்பூருக்கு வேலை தேடிச் சென்றுள்ளதாக மலேசிய முதலாளிமார்கள் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ சம்சுடின் பர்டான் கூறினார்.

கடந்த ஆண்டு ரிங்கிட் வீழ்ச்சி கண்டது முதல் மாதத்திற்கு 2 விழுக்காடு மலேசியர்கள் தங்களின் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சிங்கப்பூருக்கு வேலை தேடி சென்றுள்ளனர்.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் இன்று வரை சுமார் 24 விழுக்காடு மலேசியர்கள் அவ்வாறு சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்ற அவர்கள் மலேசியாவில் பெற்ற சம்பளத்தைவிட 2 முதல் 2.5 மடங்கு அதிகமாக வருமானம் பெற்று வருவதாக அவர் சொன்னார்.

சிங்கப்பூர் டாலர் மலேசிய ரிங்கிட்டைவிட கூடுதல் மதிப்பு கொண்டுள்ளதால் அவர் இந்த கூடுதல் வருமானத்தைப் பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, இந்நாட்டிலுள்ள அதிகமான இளைஞர்கள் வேலை தேடி சிங்கப்பூர் செல்வது ஒன்றும் புதியதல்ல என்று அவர் சொன்னார்.

அதிகமான இளைஞர்கள் சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்றுள்ளதால், ஜோகூர்பாருவிலுள்ள அதிகமான உணவகங்களிலும், காப்பிக் கடைகளிலும் வேலைக்கு ஆள் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் சொன்னார்.

வரும் காலங்களிலும் ஜோகூர்பாருவிலுள்ள உணவகங்களும், காப்பிக் கடைகளும் இதே நிலையைத்தான் எதிர்நோக்க வேண்டிவரும். நீண்டகாலமாகத் தொடரப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்நிலை நாட்டிற்கு பெரும் பாதகத்தையும், இழப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும் டத்தோ சம்சுடின் சொன்னார்.–தி மலேசியன் டைம்ஸ்

Comments are closed.