பீ போன் போ என்ன தவறு செய்தார்? லிம் குவான் எங் கேள்வி
August 14, 2017
‘Chess god’ Kasparov returns to compete 12 years later
August 14, 2017

மலேசியாவின் அரசியலில் பெரியதொரு சுனாமி ….?

சிரம்பான், ஆக. 13:வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் மலாய்க்காரர்களின் 10 விழுக்காடு வாக்குகளைப் பெற்றாலே நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியைப் பிடித்துவிட முடியும் என்று ஜனநாயக செயல் கட்சியின் ஆலோசகர் லிம் கிட் சியாங் கூறினார்.

10 விழுக்காடு மலாய்க்கார வாக்காளர்களின் வாக்குகளையும், 5 விழுக்காடு இந்திய மற்றும் சீன வாக்காளர்களின் ஆதரவைப் பெற்றால் நம்பிக்கைக் கூட்டணியால் ஆட்சியைப் பிடித்து விட முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இது நடந்தால் நம்பிக்கைக் கூட்டணியால் நாடாளுமன்றத்தில் தீபகற்ப மலேசியாவில் 113 இடங்களைக் கைப்பற்றிவிட முடியும் என்று நேற்றிரவு பகாவில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

கடந்த 13ஆவது பொதுத் தேர்தலைவிட வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் கூடுதலாக 10 விழுக்காடு மலாய்க்கார வாக்காளர்கள், 5 விழுக்காடு இந்திய மற்றும் சீன வாக்காளர்களின் ஆதரவைப் பெற்றால் மலேசியாவின் அரசியலில் பெரியதொரு சுனாமி ஏற்பட்டு தேசிய முன்னணி வீழ்த்தப்பட்டு நம்பிக்கைக் கூட்டணி மத்திய அரசாங்கத்தின் ஆட்சியைப் பிடிக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இது சாத்தியமானால், தீபகற்ப மலேசியாவில் நம்பிக்கைக் கூட்டணி 113 இடங்களைக் கைப்பற்றும் வேளையில், தேசிய
முன்னணி 50 இடங்களையும் பாஸ் கட்சி 2 இடங்களையும் கைப்பற்றும் என்றார்.

நாடாளுமன்றத்தில் மொத்தம் 222 இடங்கள் உள்ளன. எஞ்சிய சபா, சரவா மாநிலத்திலுள்ள இடங்கள் இதுவரை தேசிய முன்னணியின் கோட்டையாகவே விளங்கி வந்தன.

வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் மூன்று விதமான அரசியல் நிகழும் என எச்சரித்த லிம், மேலும் 2 அதிரடிகளையும் அறிவித்தார்.

தீபகற்ப மலேசியாவிலுள்ள 165 நாடாளுமன்றத் தொகுதிகளில் 113 தொகுதிகளை தேசிய முன்னணி கைப்பற்றி வந்ததை வரும் பொதுத் தேர்தலில் பாஸ் கட்சியே அழித்து விடும் என்றார்.

கடந்த 2013ஆம் ஆண்டில் 21 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஸ் கட்சி இம்முறை வெரும் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும்.

கடந்த 13ஆவது பொதுத் தேர்தலில் தீபகற்ப மலேசியாவில் தேசிய முன்னணி 85 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியது.

வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் மலாய்க்கார வாக்காளர்களின் 1 விழுக்காடு ஆதரரை தேசிய முன்னணி இழந்தாலும்கூட, அது 10 விழுக்காடு சீன வாக்காளர்கள் மற்றும் 5 விழுக்காடு இந்திய வாக்காளர்களின் ஆதரவையும் பெறும் என்றார்.

மற்றொரு விவகாரத்தில் தேசிய முன்னணியும், நம்பிக்கைக் கூட்டணியும் தலா 80 இடங்களைக் கைப்பற்றும் வேளையில்,
பாஸ் கட்சி 5 இடங்களை மட்டுமே பெறலாம் என்றார்.

இது தேசிய முன்னணி 5 விழுக்காடு மலாய்க்கார வாக்காளர்களின் ஆதரவையும், சீன மற்றும் இந்திய வாக்காளர்களின் ஒரு விழுக்காடு ஆதரவை இழந்தால் மட்டுமே நிகழும் என்றார்.

கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது ஜசெக மற்றும் பி.கே.ஆர். கட்சிகள் போட்டியிட்ட தொகுதியிலேயே இம்முறையும் போட்டியிடும் என்ற அவர், பாஸ் கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் அமானாவும், பெர்சத்து கட்சியும் போட்டியிடும் என்றார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் எந்நேரத்திலும் நடைபெறலாம். ஆனால், அது வரும் நவம்பர் மாதம் அல்லது அடுத்தாண்டின் முதல் கால் ஆண்டில் நடைபெறலாம் என்றும் ஆருடங்கள் கூறப்பட்டு வருகின்றன.

அடுத்தாண்டு ஆகஸ்டு மாதத்திற்குள் நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

Comments are closed.