தொடங்கியது லீமா 2017
March 21, 2017
அதிகமான அந்நிய மாணவர்களைக் கவர மலேசியா இலக்கு
March 21, 2017

மருந்துகளுக்கு உச்ச வரம்பு விலை

கோலாலம்பூர், மார்ச் 21: நாட்டிலுள்ள வசதி குறைந்தவர்கள் தரமான மருந்துகளை வாங்கும் ஆற்றலைக் கொண்டிருக்க மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்தும் முறை ஒன்றை அமைக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

அதன் அடிப்படையில் மருந்துகளுக்கான உச்ச வரம்பு விலையை நிர்ணயிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு உள்நாட்டு வாணிக கூட்டுறவு பயனீட்டு அமைச்சுடன் கலந்தாலோசிக்கவிருப்பதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியம் தெரிவித்தார்.

அனைத்து நிலை மக்களும் தரமான மருத்துவ வசதிகளைக் கொண்டிருப்பதை உறுதிபடுத்தும் அரசாங்கத்தின் முயற்சியாக இது கருதப்படுகிறது. சந்தைகளில் நீரிழிவு இருதய நோய் போன்றவற்றுக்கான மருந்துகளின் விலை அதிகம் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

2018 ஆம் ஆண்டில் ஆண்டுக்கு ஆயிரத்து 500 மருத்துவ நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்க சுகாதார அமைச்சு இலக்கு கொண்டுள்ளது. தற்போது நாட்டிலுள்ள அரசாங்க மருத்துவமனைகளில் மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறை நிலவுவதை சுகாதார அமைச்சு ஒப்புக் கொண்டுள்ளது.

இருப்பினும், அப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என சுப்ரா நம்பிக்கை கொண்டுள்ளார். 2012 ஆம் ஆண்டில் பல்வேறு மருத்துவ துறைகளில் சுமார் 300 மருத்துவ நிபுணர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

நடப்பில் அவ்வெண்ணிக்கை ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதன் வழி நிபுணத்துவ மருத்துவர்களின் எண்ணிக்கையும் மும்மடங்கு அதிகரிக்கும் என அவர் கூறினார்.–தி மலேசியன் டைம்ஸ்

Comments are closed.