காச நோய் கண்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு
April 21, 2017
Adam Rosly dituduh beri pernyataan dan dokumen palsu
April 21, 2017

பொதுச் சேவை ஊழியர்களிடையே அதிகரிக்கும் திவால் பிரச்சனை

கோலாலம்பூர், ஏப்ரல் 21: மலேசிய தேசிய கணக்குத் துறை இம்மாதம் முதல் அரசாங்க பணியாளர்களின் சம்பளத்தில் கூடிய பட்சம் 60 விழுக்காடு வரை பிடித்தம் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளவிருக்கிறது. பொதுச் சேவை பணியாளர்களிடையே காணப்படும் கடும் கடன் பிரச்னையைக் கையாள கணினி சம்பள முறை வாயிலாக இவ்வாறு செய்யப்படவிருப்பதாக பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அசாலீனா ஒத்மான் சாயிட் தெரிவித்தார்.

இதன் வழி, அவர்கள் தங்களின் நிதி நிர்வாகத்தை மேலும் ஆக்ககரமாக மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார். மேலும் கடும் கடன் பிரச்னையில் சிக்காமலும் அவர்கள் தவிர்க்க முடியும்.

தேசிய கணக்கு துறையின் புள்ளிவிவரப்படி இவ்வாண்டு ஜனவரி வரையில், 1.59 மில்லியன் பொதுச் சேவை ஊழியர்களில் 61 ஆயிரத்து 726 பேர் 40 விழுக்காட்டுக்கும் குறைவாக நிகர வருமானம் பெற்றதாக அவர் தெரிவித்தார்.

அங்காசா மூலம் தனிநபர் கடனுக்காக பிடித்தம் செய்யப்பட்ட தொகை அரசு ஊழியர்களிடையே கடுமையான கடன் பிரச்சனைகளில் மிகப் பெரிய பங்களிப்பைச் செய்துள்ளது. அதனால் 2013 ஆம் ஆண்டு 617 அரசு ஊழியர்கள் திவாலானதாக அறிவிக்கப்பட்டனர்.

2013 ஆண்டிலிருந்து 2016-ஆம் ஆண்டு வரையில் மூவாயிரத்து 276 பொது ஊழியர்கள் திவால் ஆகியுள்ளனர். அவ்வெண்ணிக்கையில் 2013 ஆம் ஆண்டு 617 சம்பவங்கள், 2015 ஆம் ஆண்டு 960 சம்பவங்கள், 2016 ஆம் ஆண்டு ஆயிரத்து 93 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2015 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் கடந்தாண்டு மட்டும் திவாலான பொது சேவை ஊழியர்களின் எண்ணிக்கை 13.9 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அசாலீனா கூறியுள்ளார்.

இம்மாதம் தொடங்கி தேசிய கணக்காய்வுத்துறை பொது சேவை ஊழியர்களின் சராசரி மொத்த ஊதியத்திலிருந்து அதிகபட்சம் 60 விழுக்காட்டு வரையில் பிடித்தம் செய்யும் முறையை அமலாக்கவிருகிறது.–தி மலேசியன் டைம்ஸ்

Comments are closed.