Gigit tangan anggota polis, pengurus syarikat swasta didenda RM2,500
January 10, 2017
கல்வி அமைச்சின் நடைமுறைகள் மறுசீரமைக்கப்படும்
January 10, 2017

பொங்கலுக்கு விடுமுறை இல்லை

சென்னை, ஜனவரி 10: இந்திய மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் திருநாள் நீக்கப்பட்டிருப்பதை தமிழக அரசியல் தலைவர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர்.

இந்த முடிவினால் மத்திய அரசு ஊழியர்களுக்கு பொங்கல் கட்டாய விடுமுறை கிடையாது. பொங்கல் கொண்டாடுவோர் உயர் அதிகாரிகளின் முன் அனுமதி பெற்று விடுப்பு எடுத்து கொள்ளலாம். அதேசமயம் அலுவலக உயர் அதிகாரி நினைத்தால், விடுமுறையை ரத்து செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தமிழர்களை சிறுமைபடுத்தும் முடிவு என தமிழகத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

பொங்கல் பண்டிகைக்கு கட்டாய விடுமுறை இல்லை என்பது 2008 முதல் நடைமுறையில் உள்ளது. இதற்கு அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் தி.மு.க. தான் காரணம் என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சாடியுள்ளார்.

பொங்கல் பண்டிகைக்கு கட்டாய விடுமுறை இல்லை என்பது ஊழியர் நலக்குழு எடுத்த முடிவு. கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகையை நீக்கி 2008 ஆம் ஆண்டில் முதலில் அறிவிப்பு வெளியானது.

அப்போது மத்தியில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. ஆட்சியில் இருந்தன. அப்போது இப்பிரச்னை குறித்து யாரும் குரல் எழுப்பவில்லை. இந்த விவகாரத்தில் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தது தி.மு.க. தான் என அவர் குற்றம் சாட்டினார்.

இதேபோன்று, 2012 ஆம் ஆண்டில் பொங்கலுக்கு கட்டாய விடுமுறை இல்லை எனும் சூழல் உருவானது. அப்போதும் மத்தியில் ஆட்சியில் இருந்ததது காங்கிரஸ் மற்றும் தி.மு.க. தான்.

அச்சமயம், தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க., கூட இது குறித்து எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் பா.ஜ. வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அதை தடுக்க பார்க்கவே இது போன்ற பொய் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர் என பொன் ராதாகிருஷ்ணன் கூறினார். —தி மலேசியன் டைம்ஸ்

Comments are closed.