Dua mangsa kebakaran pusat tahfiz dijangka pulang esok
October 12, 2017
14,688 பேரின் கடன் பிரச்சினைக்கு தீர்வுக்காண ஏ.கே.பி.கே. உதவி!
October 12, 2017

பாலாவின் மானநட்ட வழக்கில் எதிர்வாதம் செய்ய நஜிப் – ரோஸ்மாவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

கோலாலம்பூர், அக். 12: தனியார் உளவுத்துறை அதிகாரி பி. பாலசுப்பிரமணியத்தின் குடும்பத்தினர் தொடுத்துள்ள 10 லட்ச வெள்ளிக்கும் மேற்பட்ட மானநட்ட வழக்கில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும் அவரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோரும் எதிர்வாதம் புரியுமாறு நேற்று  இங்குள்ள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

குண்டு வெடிப்பில் உயிரிழந்த மங்கோலியா அழகி அல்தான்துயா மரண வழக்கில் முக்கிய சாட்சியாக விளங்கிய தனியார்
துறை உளவு பேதா பாலசுப்பிரமணியத்தின் துணைவியார் செந்தமிழ்ச்செல்வியும் அவரின் 3 பிள்ளைகளும் தொடுத்துள்ள இந்த
வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு நஜிப் – ரோஸ்மா தம்பதியர் உட்பட இதர 7 பேரும் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர்.

ஆனால்,  பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அவரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர், பிரதமரின்
இரண்டு தம்பிகள், வழக்கறிஞர்களான செச்சில் அப்ரஹாம், சீனி அப்ராஹாம் உட்பட கம்பள வியாபாரி தீபாக் ஜெய்கிஷியன் ஆகிய
7 பேரும் இவ்வழக்கில் எதிர்வாதம் புரியுமாறு உயர்நீதிமன்ற நீதிபதி டத்தோ ஹசியூவ் கெங் உத்தரவிட்டார்.

மேற்கண்ட 7 பேரும் வரும் 14 நாட்களுக்குள் எதிர்வாதம் செய்ய வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
செந்தமிழ்ச்செல்வியும் அவரின் 3 பிள்ளைகளும் தொடுத்துள்ள இந்த மானநட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு மேற்கண்ட எழுவரும்  தொடுத்திருந்த வழக்கையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.

மானநட்ட வழக்கு ஒன்றில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை எதிர்வாதம் புரியுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது  இதுவே முதன் முறையாகும்.

அல்தான்துயா ஷாரிபு தொடர்பாக தம் கணவர் பாலசுப்பிரமணியம் செய்து கொண்ட இரு சத்தியப்பிரமாணப் பத்திரம் தொடர்பாக தனது குடும்பம் தவறான முறையில் வெளிநாட்டிற்கு வெளியேற்றப்பட்டதாக தமிழ்ச்செல்வி வழக்குத் தொடுத்திருந்தார்.

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை தாங்கள் வெளிநாட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டதால், தாங்கள்
வருமானம் இழந்ததோடு தங்களின் குடும்பம் பெரும் இழப்புக்கு ஆளாகியதாகவும் பாலசுப்பிரமணியத்தின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி இவ்வழக்கைத் தொடுத்திருந்தனர். –தி மலேசியன் டைம்ஸ்

Comments are closed.