Jong-nam’s body will not be released until family DNA sample given
February 17, 2017
M’sian forensics test samples in Kim Jong Nam killing
February 17, 2017

நாடு திவாலாகப் போகிறதா? நஜிப் தரும் விளக்கம்

கோலாலம்பூர், பிப்ரவரி 17: நாடு திவாலாகப் போகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், நாட்டு மக்களுக்கு அரசாங்கம் வழங்கி வரும் பிரிம்’ எனப்படும் ஒரே மலேசியா மக்கள் உதவித் தொகை ஆண்டு தோறும் உயர்த்தப்படுகிறதே என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.

மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரே மலேசியா உதவித் தொகை ஆண்டு தோறும் உயர்த்தப்பட்டு வரும் வேளையில், நாடு திவாலாகப் போகிறது என்ற குற்றச்சாட்டை உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறு அவர் தமது அகப்பக்கத்தில் கூறியுள்ளார்.

மாதம் 3 ஆயிரம் வெள்ளிக்கும் குறைவாக குடும்ப வருமானம் பெறும் குடும்பத் தலைவருக்காக கடந்த 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரே மலேசியா உதவித் தொகை அப்போது ஆண்டுக்கு 500 வெள்ளியாக வழங்கப்பட்டது.

அன்று முதல் ஆண்டு தோறும் அத்தொகை உயர்த்தப்பட்டு இவ்வாண்டு அது 1,200 வெள்ளியாக உயர்த்தப்பட்டது.

இவ்வாண்டிற்கான அத்தொகை நாளை முதல் வழங்கப்படும். அதற்கு விண்ணப்பம் செய்த 82 லட்சத்து 70 ஆயிரம் பேரில் 51 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு அரசாங்கம் இந்த உதவித் தொகையை வழங்கி வருகிறது.

இதனிடையே, இவ்வாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்ந்துள்ளதாக பிரதமர் சொன்னார். மாறாக, எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல் நாடு ஒருபோதும் திவாலாகிவிடாது என்று அவர் சொன்னார்.

கடந்த ஆண்டின் நான்காவது கால் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் 4.6 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் அவர் சொன்னார். தனியார் துறை 4.2 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.–தி மலேசியன் டைம்ஸ்

Comments are closed.