சிலாங்கூரில் பதவி விலக மாட்டோம், பாஸ் கட்சி திட்டவட்டம்
May 19, 2017
Lima pegawai zakat P. Pinang bebas dengan jaminan SPRM
May 19, 2017

நகர்ப்புற ஏழைகளுக்கு உணவுத் திட்டம் அறிமுகம்

புத்ராஜெயா, மே 19: நகர்ப்புறங்களில் வாழும் ஏழைகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டம் கொண்டுள்ளது.

நகர்ப்புறங்களில் வாழும் பரம ஏழைகளுக்கு தேசிய நீல அலை விவேகத் திட்டத்தின் கீழ் பல்வேறு அமைச்சுகளை உள்ளடக்கிய குளிர்ந்த கெட்டியான சமைக்கப்படாத உணவுகளை வழங்குவதற்கு அரசாங்கம் திட்டம் கொண்டுள்ளது.

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி தலைமையில் நடைபெற்ற நகர்ப்புற வறுமை ஒழிப்பு குழுவில்இப்பரிந்துரைகள்முன்வைக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

தற்போது நாட்டின் வாழ்க்கைச் செலவினம் அதிகரித்துள்ளதால் நகப்புற மக்கள் எதிர்நோக்கி வரும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு இக்கூட்டத்தில் அதுகுறித்து விவாதிக்கப்பட்டதுடன் அது தொடர்பான அறிக்கைகளை தயாரிப்பதற்கும் முடிவு செய்யப்பட்டது.

உள்நாட்டைச் சேர்ந்த சில பேரங்காடிகளின் உதவியோடு இந்த குளிர்ந்த கெட்டியான சமைக்கப்படாத உணவுகளை நகர்ப்புற பகுதியிலுள்ள ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்படும் என்று இக்கூட்டத்தை முன்னிட்டு உள்நாட்டு வாணிப, கூட்டுறவு, பயனீட்டாளர் துறை அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதேவேளையில், பெரிய நகரங்களிலுள்ள உயர்கல்வி மாணவர்களுக்கு சமைத்த உணவுகள் நியாயமான விலையில் விற்கப்படும் எனவும் அந்த அமைச்சு கூறியது.

முன்னாள் மாணவர்கள் இங்குள்ள உயர்கல்வி நிலையங்களிலுள்ள மாணவர்களுக்கு விநியோகம் செய்வார்கள் என்றும் அந்த அறிக்கை கூறியது.

இக்கூட்டத்தில் உள்நாட்டு வாணிப, கூட்டுறவு, பயனீட்டாளர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஸைனுடின், சுகாதார துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், பொதுப்பணித் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ பாட்சிலா யூசோப், பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சஹிடான் காசிம் ஆகியோரும் கலந்து கொண்டனர். –தி மலேசியன் டைம்ஸ் 

Comments are closed.