Najib boleh menang sebab rakyat dah “bosan” terhadap politik – Dr M
May 19, 2017
சிறார், மகப்பேறு மருத்துவமனை ஆகஸ்டில் செயல்படத் தொடங்கும்!
May 19, 2017

சிலாங்கூர் மாநில மக்கள் கண் விழிக்க வேண்டும்!

சுங்கை பெசார், மே 19: சிலாங்கூர் மாநிலத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் நிலையை கருத்தில் கொண்டு அம்மாநில மக்கள் கண் திறக்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில அம்னோ தலைவர் டான்ஸ்ரீ நோ ஒமார் கேட்டுக் கொண்டார்.

வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் தற்போதுள்ள ஜசெக, பி.கே.ஆர். மற்றும் அமானா நெகாரா அரசாங்கத்தை நிராரிக்கும் நேரம் இம்மாநில மக்களுக்கு வந்து விட்டது என்றும் அவர் நேற்று சபாக் பெர்ணத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மாநில மக்கள் கண்விழித்து பார்க்க வேண்டும். காரணம் வளர்ச்சி கண்ட மாநிலத்தில் பல்வேறு விவகாரங்கள் தலைதூக்கியுள்ளன. மாநில அரசாங்கம் அரசியல் நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருந்தால் அவர்கள் எப்படி மாநில மக்களின் நலனில் கவனம் செலுத்த முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பாஸ் மற்றும் பி.கே.ஆர். கட்சிகளுக்கிடையிலான உறவு கடந்த 11.5.2017ஆம் தேதியோடு முறிந்துவிட்ட நிலையில் பாஸ் கட்சியைச் சேர்ந்த 3 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இன்னும் பதவி விலகாகமல் இருந்து வருவது குறித்து அவரிடம் கேட்டபோது அவர் இவ்வாறு சொன்னார்.

பாஸ் கட்சியைச் சேர்ந்த 3 ஆட்சிக்குழு உறுப்பினர்களும் மாநில சுல்தான் அவர்களாகல் நியமனம் செய்யப்பட்டதால் அவர்கள் ஒருபோதும் பதவி விலக மாட்டார்கள் என்று பாஸ் கட்சி நேற்று அறிவித்திருந்தது.–தி மலேசியன் டைம்ஸ் 

Comments are closed.