சிலாங்கூர் மாநில மக்கள் கண் விழிக்க வேண்டும்!
May 19, 2017
Perak Pakatan pays 20000 coins to EC to object phantom voter
May 19, 2017

சிறார், மகப்பேறு மருத்துவமனை ஆகஸ்டில் செயல்படத் தொடங்கும்!

கோலாலம்பூர், மே 19: கோலாலம்பூர் மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் சிறார் மற்றும் மகப்பேறு மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் 99 விழுக்காடு முடிந்து விட்டதாகவும் அது வரும் ஆகஸ்டு மாதம் செயல்படத் தொடங்கும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். சுப்பிரமணியம் தெரிவித்தார்.

கோலாலம்பூர் மருத்துவமனையை தரம் உயர்த்தும் வகையிலயே சுமார் 84 கோடியே 80 லட்சம் வெள்ளி செலவில் இது கட்டப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் கோலாலம்பூர் மருத்துவமனையில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இப்புதிய கட்டடம் பூர்த்தியானதும் சிறார் மற்றும் மகப்பேறு பிரிவுகள் அனைத்தும் இப்புதிய கட்டடத்திற்கு மாற்றலாகும் என்றும் அவர் சொன்னார்.

நேற்று கோலாலம்பூர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வருகை அளித்தப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சருடன் கோலாலம்பூர் மருத்துவமனையின் இயக்குநர் டத்தோ டாக்டர் ஸைனியா முகமட் ஸாயின், அவசர சிகிச்சைப் பிரிவின் தலைவர் பேராசிரியர் டத்தோ டாக்டர் அபு ஹசான் அசாரி அப்துல்லாவும் உடன் இருந்தனர்.

தற்போது சிறார் மற்றும் மகப்பேறு சிகிச்சைகள் தனி இடத்தில் நடைபெற்று வருகிறது. இப்புதிய கட்டடடம் தயாரானதும் அவ்விரண்டு சேவைகளும் ஒரே இடத்தில் செயல்படும் என்றார்.

கோலாலம்பூர் மருத்துவமனையை மேலும் தரம் உயர்த்தும் வகையில் அறுவைச் சிகிச்சை மண்டபம், தீவிர கண்காணிப்புப் பிரிவு, கூடுதல் வார்டுகள் ஆகியவை 19 கோடியே 80 லட்சம் வெள்ளி செலவில் விரிவாக்கம் செய்யப்படும் என்றார்.

இப்போது அத்திட்டம் அனுமதிக்காக காத்துக் கொண்டிருக்கிறது என்ற அவர், அடுத்தாண்டு அதன் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்றார். —தி மலேசியன் டைம்ஸ் 

Comments are closed.