Adenan pemimpin politik kesejahteraan
January 11, 2017
6 years jail, RM3000 fine for armed robber
January 11, 2017

சரவாக் முதலமைச்சர் காலமானார்

கூச்சிங், ஜனவரி 11: சரவாக் முதலமைச்சர் டான் ஸ்ரீ அட்னான் சாத்தீம் இன்று கோத்தா சமரஹான்-னில் உள்ள மாநில பொது மருத்துவமனை காலமானார். இருதய பிரச்சனை எதிர்நோக்கியிருந்த அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை.

அட்னான் மாநிலத்திற்கும் மாநில மக்களுக்கும் அளப்பரிய சேவையை வழங்கி இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் குறிப்பிட்டுள்ளார். மலேசியா ஆற்றல்மிக்க தலைவர் ஒருவரை இழந்துவிட்டதாக பிரதமர் இரங்கல் செய்தியில் சொன்னார்.

இதனிடையே, சரவா முதலமைச்சர் மறைவுக்கு துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹமட் சாயிட் ஹமிடி தமது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். உள்துறை அமைச்சருமான அவர் தமது டுவிட்டரில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அட்னானின் மறைவு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்யப்படவிருக்கும் நிலையில், ஊடகவியலாளர்கள் சரவாக் மாநில அரசாங்க நிர்வாக கட்டிடத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

சரவாக் துணை முதலமைச்சர் டத்தோ அமார் அபாங் ஜொஹாரி துன் ஓபெங் மற்றும் மாநில அரசாங்க தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ முகமட் மோர்ஷிடி அப்துல் கானி ஆகியோர் இன்று மாலை சிறப்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அது தொடர்பில் அறிவிப்பு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.–தி மலேசியன் டைம்ஸ்

Comments are closed.