“சட்டத் திருத்த விதியை போராடி உருவாக்கியதே நாங்கள்தான்! பொறுப்பிலிருந்து எப்போதும் பின்வாங்கியதில்லை” டாக்டர் சுப்ரா உறுதி!
August 12, 2017
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்கொலை முயற்சி நடிகை ஓவியாவுக்கு ‘சம்மன்’
August 12, 2017

கேமரன்மலையில் கேவியஸ் மட்டுமே  மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார்….

கோலாலம்பூர், ஆக.12: தேசிய அரசியல் நீரோட்டத்தில் பழுத்த அனுபவத்தைக் கொண்ட மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவரும் கேமரன்மலை மண்ணின் மைந்தருமான டான்ஶ்ரீ கேவியஸ் அங்கு மேற்கொண்டு வரும் உருமாற்றங்கள் நிச்சயம் கேமரன்மலையை  வளமாக்கும் எனக் கூறப்படுகிறது.

மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம். கேவியஸ், இந்நாட்டு அரசியலில் நீண்டகால அனுபவத்தைக் கொண்டுள்ளார். முன்னாள் பிரதமர் துன் மகாதீர், துன் அப்துல்லா, தற்போதைய பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் அப்துல் ரசாக் ஆகியோரின் தலைமைத்துவத்தில் பெரும் பங்காற்றியுள்ளார். இந்த மூன்று தலைவர்களுடன் கொண்ட அனுபவத்தின் வாயிலாகவும் தமக்கென வகுத்திருக்கும் தனியொரு பாணியின் வாயிலாகவும் கேமரன்மலையை நிச்சயம் மீண்டும் வளமாக்குவதை சாத்தியமாக்குவார் என மைபிபிபி தேசிய இளைஞர் அணியின் முன்னாள் தலைவர் ஹரிட்ஸ் மோகன் கூறினார்.

கேமரன்மலையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் ஏதோ வந்தோம்; சென்றோம் என்றில்லாமல், அதற்கு முழுமையானதோர் அர்த்தத்தைக் கொடுப்பதில் தெளிவாக இருப்பவர் அவர். அந்த வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, கேமரன்மலையில் அவர் அமல்படுத்தியிருக்கும் உருமாற்றத் திட்டங்கள் யாவும் வரலாற்றுப் பதிவேட்டில் பொறிக்கப்பட வேண்டியதாகும்.

தன்முனைப்பு (motivation), தலைமைத்துவம் (leadership),  உணர்வின் வலிமை (emotional strength), ஆன்மிக பலம் (Spiritual strength), அறிவு பலம் (Mental  strength), கல்வியில் சிறப்பு (Excellence in Studies), விளையாட்டில் சிறப்பு (Excellence in Sports), சிறந்த மனப்பான்மை (Excellence in Attitude) ஆகியவற்றை தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும்.

இவற்றைத் தவிர்த்து வணிக மேம்பாடு, கல்விக்கு உறுதுணை, நம்பிக்கைக்கு அங்கீகாரம், கலை கலாச்சாரத்திற்கு மரியாதை போன்ற பல்வேறு பிரிவுகளை உட்படுத்தி இதுவரை கேமரன்மலையில் டான்ஶ்ரீ கேவியஸ் மேற்கொண்டு வரும் உருமாற்றங்கள் யாவும் தூரநோக்கு சிந்தனைகளுக்கான அடித்தளம் என்பதை நிரூபிக்கின்றன. ஒரு கட்சியின் தேசிய இளைஞர் பிரிவுக்கு முன்னாள் தலைவராகப் பதவி வகித்த நான், இந்த உருமாற்றங்களைப் பெற்ற கேமரன்மலை மக்கள் நிஜமாகவே கொடுத்து வைத்தவர்கள்தாம்.

கேமரன்மலையில் அடுத்தத் தலைமுறைக்கான பாதையைக் காண்பிக்க டான்ஶ்ரீ கேவியஸ் மட்டுமே  மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார். பழுத்த அனுபவத்துடன் தூர நோக்குச் சிந்தனையும் கொண்ட டான்ஶ்ரீ கேவியசுக்கு கேமரன்மலை மக்கள் கொடுத்துவரும் அமோக ஆதரவு இன்னும் இரட்டிப்பானால், மேலும் பல உருமாற்றங்கள் உங்களுக்காக உங்கள் மண்ணின் மைந்தர் கேவியஸ் அவர்களால் விவேகமான முறையில் வகுக்கப்படும் என்ற நம்பிக்கை தமக்கு உண்டு என ஹரிட்ஸ் மோகன் கூறினார்.

 

 

 

Comments are closed.