பொங்கலுக்கு விடுமுறை இல்லை
January 10, 2017
Baju Merah tiada rancangan ‘kacau’ Himpunan 355
January 10, 2017

கல்வி அமைச்சின் நடைமுறைகள் மறுசீரமைக்கப்படும்

புத்ராஜெயா, ஜனவரி 10: கல்வி அமைச்சின் நடைமுறைகளில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. முடிவெடுக்கும் விவகாரத்தில் மாநில கல்வித் துறை மாவட்ட கல்வி அலுவலகம் ஆகியவற்றுக்கு கூடுதல் அதிகாரம் பெற வகை செய்ய கல்வி அமைச்சு மறுசீரமைக்கப்படுவதாக கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ மஹட்சீர் காலிட் கூறினார்.

கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி கல்வி அமைச்சு சமர்ப்பித்த அந்த விண்ணப்பத்திற்கு பொதுச் சேவைத் துறை அனுமதி அளித்துள்ளதாக அவர் சொன்னார். இதன் தொடர்பில் மாநில கல்வித் துறைக்கும் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கும் கல்வி அமைச்சு விரைவில் முழு அறிக்கையை அனுப்பும் என்றார் அவர்.

மாநில கல்வித் துறைக்கும் மாவட்ட கல்வி அலுவலகத்துக்கும் கூடுதல் அதிகாரத்தை வழங்க அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மஹட்சீர் தெரிவித்தார்.

மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முழுமைப் பெற்றவுடன், அமைச்சின் அதிகாரத்துக்கு உட்பட்ட விவகாரங்கள், மாநில கல்வித் துறை, மாவட்ட கல்வி அலுவலகம் ஆகியவற்றின் அதிகாரத்துக்கு உட்பட்ட விவகாரங்கள் ஆகியவை தொடர்பில் முழு பட்டியல் ஒன்றும் வெளியிடப்படும்.

அதன் வாயிலாக நிர்வாக முறையிலுள்ள சிக்கலான அதிகாரத்துவப் பணிச் சுமையை குறைக்க முடியுமென என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, தற்போது ஒரு பள்ளிக்கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டால், அமைச்சு நிலையில் அதற்கு விளக்கமளிக்கப்பட வேண்டும். அந்தத் தீ விபத்து தொடர்பில் பள்ளி நிர்வாகம், மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும், பின்னர் அது மாநில கல்வித் துறைக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதியாக அமைச்சின் கவனத்துக்கு கொண்டு வரப்படும்.

அமைச்சு கூட்டம் நடத்திய பின்னரே அவ்விவகாரம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும். எனினும், மறுசீரமைப்புக்கு பின்னர் தீ விபத்து ஏற்படும் பள்ளியை மறுசீரமைக்க தேவைப்படும் நிதி குறித்து மாநில கல்வி துறை முடிவுச் செய்து கல்வி அமைச்சுக்கு தெரியபடுத்தும். அந்த ஒதுக்கீட்டை வழங்கும் நடவடிக்கை மட்டுமே அமைச்சு நிலையில் மேற்கொள்ளப்படும் என மஹட்சீர் தெளிவுப்படுத்தினார்.–தி மலேசியன் டைம்ஸ்

Comments are closed.