Kanak-kanak perempuan hilang diambil ibu kandungnya sendiri
January 10, 2017
Govt encourages young people to work as express bus drivers
January 10, 2017

கடப்பிதழை தவறவிடுபவர்களுக்கு அபராதம் – பரிந்துரையை பரிசீலிக்கிறது குடிநுழைவுத் துறை

கோலாலம்பூர், ஜனவரி 10: கடப்பிதழ்களை தொலைப்போருக்கு தண்டனை விதிக்கும் யோசனையை குடிநுழைவுத் துறை ஆராய்கிறது.

மலேசிய குடிநுழைத் துறை, அனைத்துலக கடப்பிதழை தொலைத்து விடும் நபர்களுக்கு எதிரான தண்டனை விதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. அனைத்துலக கடப்பிதழ் மீது மலேசியர்கள் கூடுதல் கவனம் செலுத்துவதற்கு ஏதுவாக அந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதன் இயக்குநர் டத்தோ முஸ்தாபார் அலி தெரிவித்தார்.

இதற்கு முன், கடப்பிதழை தொலைத்த மலேசியர்கள் போலிசில் புகார் அளித்த பின்னர் எவ்வித அபராதமும் இன்றி மாற்று கடப்பிதழுக்கு விண்ணப்பிக்க முடியும். கடப்பிதழ் என்பது மிகவும் முக்கியமான ஆவணம் என்பதோடு, அதை தயாரிப்பதற்கு குடிநுழைவு துறைக்கு அதிக செலவினங்கள் ஏற்படுகிறது.

அதனால் கடப்பிதழ் உரிமையாளர்கள் அதனை பாதுகாப்புடன் வைத்திருக்க வழிவகுக்கும் வகையில், அபராதம் விதிக்கும் பரிந்துரைக் குறித்து விவாதிக்க செயற்குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.

இந்த யோசனை துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹமட் சாயிட் ஹமிடி-யின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கொள்கை அளவில் இதற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது.

கடப்பிதழை தொலைக்கும் உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்கும் பரிந்துரையை குடிநுழைவு துறை முன்வைத்தது. இப்பரிந்துரை சாயிட்-டின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அவரது பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

வரும் மார்ச் 31-ஆம் தேதி தொடங்கி, அனைத்து அனைத்துலக விமான நிலையங்களிலும், SLTD எனும் திருடு அல்லது தொலைந்துப் போன பயண ஆவணங்கள் முறையின் பயன்பாடு விரிவுப்படுத்தப்படவுள்ளது. கடந்தாண்டு மட்டும் 44 ஆயிரத்து 528 கடப்பிதழ்கள் தொலைந்திருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.–தி மலேசியன் டைம்ஸ்

Comments are closed.