Belum habis isu pesta arak, kini pesta ‘tarian gay’ pula muncul
September 20, 2017
விசாணைக்குப் பின்னரே எழுவரின் தலைவிதி தெரியும்!
September 20, 2017

ஒழுங்கீனச் செயல்களில் மாணவர்களா?

மலாக்கா, செப். 20: ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் சிறைச்சாலைகளுக்கு குறிப்பாக தடுப்புக் காவல் மையங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று மலாக்கா மாநில போலீஸ் நேற்று பரிந்துரை செய்துள்ளது.

அவர்கள் தொடர்ந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடா வண்ணம் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நடவடிக்கை மிகவும் உதவி செய்யும் என்று அம்மாநில போலீஸ் தலைவர் டத்தோ அப்துல் ஜாலில் ஹசான் கூறினார்.

இப்பரிந்துரை இன்னும் பேச்சுவார்த்தை அளவிலேயே உள்ளது. மாணவர்களை அச்சுறுத்த வேண்டும் என்பதற்காக இந்நடவடிக்கை அல்ல. மாறாக, நாட்டின் சட்டவிதிகளுக்கு புறம்பான வகையில் எந்தவித சட்டவிரோத நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்பதை நினைவுறுத்தவே என்றார்.

மாணவர்களிடையே அதிகரித்து வரும் ஒழுங்கீனச் செயல்களுக்கு எவ்வாறு தீர்வுகாண்பது என நேற்று காலை மலாக்கா மாநில கல்வி இலாகா மற்றும் மாநில சமய இலாகாவுடன் நடத்தப்பட்ட கூட்டத்திற்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

பள்ளி முடிந்தப் பின்னர் தங்களின் பிள்ளைகள் ஒழுங்கீனச் செயல்கள் உட்பட ஏதாவது குற்றச்செயல்களில் ஈடுபடுவதை பெற்றோர்கள் அவசியம் கண்காணிக்க வேண்டும் என்றார்.

தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதில் பெற்றோர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும். எனவே, தங்கள் பிள்ளைகளின் அன்றாட நடவடிக்கைகளில் அவர்கள் அவசியம் அக்கறை செலுத்த வேண்டும்.குறிப்பாக பள்ளிக்குச் செல்லாத தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை அவசியம் கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் மலாக்கா மாநில போலீஸ் ஓப்ஸ் டிடிக் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு வந்துள்ளதாகவும், அப்போது பள்ளிக்கு மட்டம் போடும் மாணவர்களுக்கும், பாதியில் பள்ளி படிப்பை நிறுத்திய மாணவர்களின் பெற்றோர்களுக்கு  பல ஆலோசனைகளையும் வழங்கி வந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

கடந்த 2016ஆம் ஆண்டு கணினி மையம்,  பேரங்காடி உட்பட மாணவர்கள் அதிகமாக குழுமியிருக்கும் இடங்களில் 21 சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

இவ்வாண்டு மாணவர்கள் ஆரோக்கியமற்ற நடவடிக்கைகளில் ஈடுபடமால் இருப்பதை உறுதிப்படுத்த தாங்கள் இவ்வாண்டு கூடுதலான சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் அவர் சொன்னார். –தி மலேசியன் டைம்ஸ்

Comments are closed.