வட கொரிய அதிபரின் தம்பி படுகொலை நாடு முழுவதும் கூடுதல் பாதுகாப்பு!
February 17, 2017
Pemuda UMNO buat laporan polis dakwaan daftar warga asing untuk PRU14
February 17, 2017

ஐந்து மில்லியனுக்கும் அதிகமானோருக்கு நாளை பிரிம் தொகை

கோலாலம்பூர், பிப்ரவரி 17: ஒரே மலேசிய மக்கள் உதவி நிதி – பிரிம் தொகை இவ்வாண்டில் 5 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று மில்லியன் பேருக்கும் மேற்பட்டோரின் பிரிம் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இதுவரையில் 5, 153, 238 பிரிம் விண்ணப்பதாரர்களுக்கு அந்த உதவி அங்கீகரிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார். இன்னும் 3, 123, 950 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. அவை அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என நிதி அமைச்சருமான நஜிப் கூறினார்.

21 வயதிலிருந்து 30 வயது மற்றும் 61 வயதுக்கு மேற்பட்ட தரப்பினர் அதிகமானோர் இவ்வாண்டு பிரிம் தொகையைப் பெறவிருக்கின்றனர். சுமார் 2, 782, 799 பே ஆயிரத்து 200 ரிங்கிட் பிரிம் பெறும் வேளை, 243, 434 பேருக்கு 900 ரிங்கிட்டும் 22, 127, 005 பேருக்கு 450 ரிங்கிட்டும் பிரிம் தொகையாக வழங்கப்படும் என நஜிப் தமது அகப்பக்கத்தில் குறிப்பிட்டார்.

இதனிடையே, முதல் கட்ட பிரிம் தொகை நாளைத் தொடக்கம் கட்டங் கட்டமாக பகிர்ந்தளிக்கப்படும் என நஜிப் அறிவித்தார்

சிலாங்கூர் மாநிலத்தின் வாழும் மக்கள் அதிகமானோருக்கு பிரிம் வழங்கப்படுகிறது. சுமார் 666, 316 சிலாங்கூர் மக்கள் அந்த சலுகையைப் பெறுகின்றனர். சபாவைச் சேர்ந்த 477, 482 பேருக்கும் சரவாக்-கைச் சேர்ந்த 537, 588 பேருக்கும் பிரிம் வழங்கப்படவிருக்கிறது.

இதனிடையே, வறிய நிலையில் வாடும் மக்களுக்கு பிரிம் வழங்கப்படும் விவகாரத்தை அரசியலாக்கும் சில தரப்புக்களை நஜிப் சாடினார். மிகவும் நெருக்குதலான சூழலை எதிர்நோக்கியிருப்பதால், மக்களின் ஆதரவையும் வாக்குகளைக் கவர ஊழலாக இந்த பிரிம் வழங்கப்படுகிறது என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

அது முற்றிலும் பொய். அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. மக்கள் நலனுக்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளைக் குறை கூறுவது குற்றம் சாட்டுவது நியாயமல்ல என நஜிப் குறிப்பிட்டார்.–தி மலேசியன் டைம்ஸ்

Comments are closed.