‘Episode VIII’ to break ‘Star Wars’ tradition; new Han Solo unveiled
July 19, 2016
Spanish police issue safety tips for Pokemon Go gamers
July 19, 2016

இந்தியாவுடன் கைதி பரிமாற்ற திட்டம் – மலேசியா ஆராயும்

கோலாலம்பூர், ஜூலை 19: அனைத்துலக கைதிகள் பறிமாற்ற திட்டம் தொடர்பில் இந்தியா முன்வைத்துள்ள பரிந்துரையை மலேசியா ஆராயும் என துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹமட் சாயிட் ஹமிடி அறிவித்துள்ளார்.

இதற்கு முன்னரே இவ்விவகாரம் குறித்து இரு நாடுகளும் கலந்தாலோசித்த போதிலும், தற்போது மேலும் துல்லிதமாக ஆராயப்படும் என உள்துறை அமைச்சருமான அவர் தெரிவித்தார்.

சட்டத் துறை தலைவர் உட்பட பல்வேறு தரப்புக்களுடனான கலந்தாலோசனைக்குப் பின் இவ்விவகாரம் ஆராயப்பட வேண்டியிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

மலேசியா இதற்கு முன், அஜர்பைஜான், பல்கேரியா, ஈரான், ஈராக், லத்திவியா, பிலிப்பீன்ஸ், சவூதி அரேபியா, தென் கொரியா, துருக்கி ஆகிய நாடுகளுடன் அனைத்துலக கைதிகள் பரிமாற்றத் திட்டத்தை அமல்படுத்தியிருப்பதாக அவர் சொன்னார்.

இந்நிலையில், மலேசியர்கள் அவர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை தவிர்த்து நாட்டின் பேரில் ஒன்றுபட வேண்டும் என துணைப்பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.  உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள மலேசியர்கள் நாட்டின் நற்பெயருக்கும் தோற்றத்திற்கும் களங்கம் ஏற்படாமல் காக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அனைத்துலக அரங்கில் நாட்டின் நற்பெயரை மலரச் செய்வதில் தொடர்ச்சியாக கடப்பாட்டுடன் பணியாற்றும் மலேசிய தூதர்களை துணைப்பிரதமர் பாராட்டினார். அரச தந்திர உறவுகளை வலுப்படுத்துவதோடு மட்டுமல்ல அனைத்துலக நிலையில் சிறந்த நட்புறவு கட்டமைப்பை அவர்கள் உருவாக்கி இருப்பதாக  அவர் புகழாரம் சூட்டினார்.

இந்தியாவுக்கு மூன்று நாள் அலுவல் பயணம் மேற்கொண்டிருக்கும் சாயிட், புதுடில்லியில் மலேசிய தூதர்  ஏற்பாடு செய்த இரவு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனை வலியுறுத்தினார்.–தி மலேசியன் டைம்ஸ்

 

Comments are closed.