மருந்துகளுக்கு உச்ச வரம்பு விலை
March 21, 2017
Dr M-Nazri debate: Police say no way
March 21, 2017

அதிகமான அந்நிய மாணவர்களைக் கவர மலேசியா இலக்கு

கோலாலம்பூர், மார்ச் 21: அதிகமான அயல்நாட்டு மாணவர்கள் மலேசியாவில் மேற்கல்வி பயில்வதை ஊக்குவிக்க அரசாங்கம் தரமான கல்வித் திட்டங்களை வழங்கும் அதே வேளையில் அதற்கு நியாயமான கட்டணத்தையும் விதிப்பதாக உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ இட்ரிஸ் ஜூசோஃ கூறியுள்ளார்.

நாட்டின் நிலைத்தன்மையும் நட்புறவான சூழலும் மேலும் அதிகமான வெளிநாட்டு மாணவர்களைக் கவர உதவும் என அவர் குறிப்பிட்டார். இந்நிலையில், அமெரிக்காவின் புதிய தலைமைத்துவத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட கெடுபிடிகளால் அந்நாட்டில் மேற்கல்வி தொடரும் மாணவர்கள் எண்ணிக்கை வீழ்ச்சி கண்டிருப்பதாக, கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அந்நாட்டின் பல்கலைகழங்களுக்கும், கல்லூரிகளுக்கும் விண்ணப்பிக்கும் அந்நிய மாணவர்களின் எண்ணிக்கை, 40 விழுக்காடு சரிவு கண்டிருப்பதாக அமெரிக்க உயர்கல்விக் கழகங்களைச் சேர்ந்த, 6 கும்பல் மேற்கொண்ட அந்த ஆய்வு முடிவு தெரிவித்தது.

இந்நிலையில், மேற்கல்வி பயிலும் இளையோர் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்க அரசாங்கம் இவ்வாண்டு அறிமுகப்படுத்திய ஒரு மாணவர் ஒரு வர்த்தகம் எனும் திட்டத்திற்கு ஆக்கப்பூர்வ வரவேற்பு கிட்டியிருப்பதாக இட்ரிஸ் தெரிவித்தார்.

இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வரையில் நாட்டில் சுமார் 3 ஆயிரத்து 403 உயர்கல்வி மாணவர்கள் அவர்களின் வர்த்தக நடவடிக்கைகளை மலேசிய நிறுவன ஆணையத்தின் கீழ் பதிந்துக் கொண்டுள்ளனர். இவ்வாண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மாணவர் ஒரு வர்த்தக திட்டத்தின் கீழ் அவர்கள் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக அவர் சொன்னார்.

இவ்வாண்டு இறுதிக்குள் ஒரு மாணவர் ஒரு வர்த்தக திட்டத்தின் கீழ் வர்த்தகம் மேற்கொள்ளும் மேற்கல்வி மாணவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என இட்ரிஸ் நம்பிக்கை தெரிவித்தார்.–தி மலேசியன் டைம்ஸ்

Comments are closed.